
சிரம்பான், அக் 21 – Omicron தொற்றின் புதிய உருபு அல்லது திரலான XBB நாட்டில் கண்டறியப்பட்டதால் அடுத்த சில வாரங்களில் கோவிட் 19 தொற்று உயரக்கூடும் என சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது. எனினும் இது குறித்து பொதுமக்கள் அதிகமாக அஞ்சவேண்டியதில்லையென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில் தொற்றின் புதிய திரல்கள் அல்லது திரிபு குறித்து மக்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். நாட்டில் இன்னமும் அங்காங்கே கோவிட் தொற்று இருந்து வருவதால் கூடுதல் கவனம் தேவை என்பதையும் கைரி கேட்டுக்கொண்டார்.