Latestமலேசியா

மலேசியாவுக்கான வங்காளதேச முன்னாள் உயர் ஆணையர் கைது

புத்ராஜெயா, பிப் 10 – மலேசியாவுக்கான வங்காளதேச முன்னாள் உயர் ஆணையர் M. Khairuzzaman கைது செய்யப்பட்டிருப்பதை, உள்துறை அமைச்சர் Datuk Seri Hamzah Zainuddin உறுதிப்படுத்தினார்.

மலேசியாவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருக்கும் M. Khairuzzaman-னை கைது செய்யும்படி, வங்காளதேசம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலே, நடைமுறைக்கு உட்பட்டு மலேசிய அதிகாரத்துவ தரப்பினர், அந்த முன்னாள் உயர் ஆணையரைக் கைது செய்திருப்பதாக Datuk Seri Hamzah Zainuddin கூறினார்.

ஓய்வு பெற்ற இராணுவ மேஜரான Khairuzzaman, 1975 -ஆம் ஆண்டு சிறைச்சாலை கொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார்.

பின்னர் , 2007-ஆம் ஆண்டு, வங்காளதேச பராமரிப்பு அரசாங்கத்தின் கீழ், மலேசியாவுக்கான உயர் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார்.

2009 -இல் அவாமி லீக் கட்சி, அதிகாரத்துக்கு வந்த பின்னர் மீண்டும் டாக்காவிற்கு திரும்பி அழைக்கப்பட்டபோது , தனது பாதுகாப்புக்கு மிருட்டல் ஏற்படலாமெனக் கருதி, கோலாலம்பூரில் தொடர்ந்து வசிக்க Khairuzzaman ஐநாவுக்கான அகதிகள் அட்டையைப் பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!