Latestமலேசியா

மலேசியா உட்பட 30-கும் மேற்பட்ட நாடுகளில் நெட்பிலிக்ஸ் சேவையின் கட்டணம் குறைப்பு

கலிபோர்னியா, பிப் 24 – மிகப் பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான Netflix, உலகின் 30-கும் மேற்பட்ட நாடுகளில் அதன் சேவை கட்டணத்தைக் குறைத்துள்ளது.

பல நாடுகளில் அதிகரித்திருக்கும் வாழ்க்கை செலவீனத்தால் , மக்கள் செலவுகளைக் குறைத்து கொண்டிருப்பதை அடுத்து ,
அதிகமான சந்தாதரர்களைக் கவர, Netflix இந்த கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.

அதோடு, 190-கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை மேற்கொள்ளும் நெட்பிலிக்ஸ் , Amazon, HBO, Disney ஆகிய ஸ்ட்ரீமிங் நிறுவனங்களிடமிருந்தும் போட்டியை எதிர்நோக்கியுள்ளது.

அதையடுத்து, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், குரோஷியா, வெனிசுவாலா, கென்யா, ஈரான் உட்பட 30 –கும் அதிகமான நாடுகளில் , Netflix அதன் சேவை கட்டணத்தைக் குறைத்துள்ளது.

இந்த கட்டண குறைப்பு, Netflix -சின் சில குறிப்பிட்ட திட்டங்களை உட்படுத்தியிருக்கும் நிலையில் சில திட்டங்களுக்கான கட்டணம் பாதி வரை குறைந்துள்ளது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!