கோலாலம்பூர், பிப் 14 – தாய்லாந்து – மலேசிய எல்லையை அடுத்த மாதம் திறப்பதற்கு தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தாய்லாந்து இந்த நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக Bangkok Post தகவல் வெளியிட்டது.
தாய்லாந்து எல்லை திறக்கப்பட்டவுடன் மலேசிய சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர். Test and Go என்ற அடிப்படையில் தாய்லாந்தில் நுழைந்தவுடன் மலேசிய சுற்றுப்பயணிகள் கோவிட் சிகிச்சை மேற்கொள்ளப்படுவர். எனினும் தாய்லாந்தில் தனித்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.