Latestமலேசியா

தனிநபர் வருமான வரித் தாக்கால், மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – உள்நாட்டு வருவாய் வாரியம் எனும் LHDN, தனிநபர் வரி கணக்கின் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மே 15 வரை நீட்டித்துள்ளது.

RM2,500 ரிங்கிட் வரை புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், கைத்தொலைபேசி, இணையச் சந்தாக்கள், ஜிம் உறுப்பினர்களுக்கான செலவுகளுக்கு வரிச் சலுகைகள் பெறலாம்.

அதுபோல், வாடகை வீட்டு செலவு, விளையாட்டு பொருட்கள் வாங்குதல், போட்டிகளில் கலந்து கொள்ளுதால் ஆகியவை RM 500 ரிங்கிட் வரை வரிச் செலவினக் கழிவு உள்ளதாம்.

இதனிடையே, RM8,000 ரிங்கிட் வரை சிறப்புத் தேவைகளுக்கும் பெற்றோர்கள் பராமரிப்புகான செலவும், RM 2,500 ரிங்கிட் வரை தனிப்பட்ட சார்ஜிங் வசதிகளுக்கும் மற்றும் உடற்பேறு குறைந்தவர்களுகான அடிப்படை துணை உபகரணங்களுக்கு RM6,000 ரிங்கிட் வரை குறிப்பிடத்தக்க வரிச் சலுகைகள் அடங்கியுள்ளது.

சுய திறனை மேம்படுத்தும் படிப்புகளுக்கு RM2,000 ரிங்கிட் வரையிலும், உயர்கல்வி கட்டணத்திற்கு RM7,000 ரிங்கிட் வரையிலும், 2023 ஆம் ஆண்டில் செலவழித்த மருத்துவச் செலவுகளுக்கு RM10,000 ரிங்கிட் வரை வரிச் சலுகைகள் உள்ளதை மறவாதீர் என்றும் LHDN நினைவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!