Latestமலேசியா

மலேசியா -பாகிஸ்தான் நட்புறவு வலுவடையும் – அன்வார்

கோலாலம்பூர், ஜன 4 – மலேசியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான இரு வழி நட்புறவை வலுப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. வர்த்தகம், துறைமுகம், கல்வி, தற்காப்பு, கலச்சாரம் மற்றும் மக்களுக்கும் – மக்களுக்குமிடையிலான தொடர்புகளில் புதிய ஒத்துழைப்பை காண்பதற்கான சாத்தியம் குறித்தும் பாகிஸ்தான் பிரதமருடன் தாம் நடத்திய பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் Shebaz Sharif தம்முடைன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியபோது இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் கூறினார். .

தென் ஆசியாவில் முக்கியமான வர்த்தக பங்காளியாக பாகிஸ்தான் இருந்துவருவதோடு இவ்விரு நாடுகளுக்கிடையே வரலாற்று ரீதியாக நீண்ட கால நட்பு இருப்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார். 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் பிரதமராக அன்வார் நியமிக்கப்பட்டதற்காக அவருக்கு Shebez வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும் அண்மையில் தமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரின்போது உதவி வழங்கிய மலேசிய மக்களுக்கும் Shebaz Sharif தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பாகிஸதான் பிரதமருடன் நடைபெற்ற தொலைபேசி சந்திப்பு குறித்த விவரங்களை அன்வார் தமது முகநூலில் பதிவேற்றம் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!