Latestஉலகம்மலேசியா

மலேசியா-மொரிசியஸ் இடையிலான வர்த்தக வாய்ப்புகளை ஆராய, மொரிசியசுக்கு கே.கே மார்ட் தோற்றுநர் டத்தோ ஸ்ரீ சாய்யுடன் மலேசியத் தூதுக்குழு பயணம்

மொரிசியஸ், ஆகஸ்ட் 10 – மலேசியாவிற்கும் மொரிசியசுக்கும் இடையிலான சாத்தியமான வணிக வாய்ப்புகளை ஆராய, மலேசியாவின் கே.கே சூப்பர்ட்மார்ட் குழுமத்தின் நிறுவனர் டத்தோ ஸ்ரீ டாக்டர் கே.கே சாய் மற்றும் அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ பிரதீப் குமார், மொரிசியசுக்குப் பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் தலைமையிலான சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் தென் ஆப்பிரிக்க ஆகிய நாடுகளின் வணிக பிரதிநிதிகளும் மொரிசியசுக்குப் பயணித்தனர்.

மலேசியாவின் அனைத்துலக வணிக ஒத்துழைப்பில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் இவர்களின் வருகையை மொரிசியசின் குடியரசுத் தலைவரான ப்ரித்விராஜ்சிங் ரூபூன் ஜி.சி.எஸ்.கே.வும் (Prithvirajsing Roopun G.C.S.K) மொரிசியசின் வர்த்தக சபையை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் நேரடியாக வரவேற்றனர்.

இந்த பயணத்தின் போது, மலேசியக் குழு மொரிசியாவின் உயர்மட்ட தலைவருடனும் வர்த்தக மற்றும் பயணிட்டாளர் பாதுகாப்பு அமைச்சருடனும், சந்திப்பொன்றை நடத்தி, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததோடு, இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதனிடையே, டத்தோ ஸ்ரீ டாக்டர் கே.கே. சாய், மொரிசியஸ் Planters Agricultural By-Products Processing கூட்டுறவுச் சங்கத்துடன் கருத்திணக்க உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தமானது ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் நன்மை புரிவது மட்டுமின்றி, கே.கே குழுமத்தின் வணிக வாய்ப்புகளை ஆராயும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

இந்த அனைத்துலக ஒத்துழைப்பு மலேசியா – மொரிசியசின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் நன்மை பயக்காமல், முழு தென்கிழக்கு ஆசியாவிற்கான பரந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் கே.கே சாய் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மலேசியவுக்கும் மொரிசியசுக்கும் இடையிலான வர்த்தக உறவு படிப்படியாக வளர்ந்து வருவதை, கடந்த 2023ஆம் ஆண்டின் மொத்த வர்த்தகமான ஏறக்குறைய 1.35 பில்லியன் ரிங்கிட்டை எட்டியதன் வழி மிகவும் துல்லியமாக காணமுடிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!