கோலாலம்பூர், நவ 28 – பாலஸ்தீன் மக்களின் அடக்குமுறை விவகாரத்தில் நாம் தொடர்ந்து துணிச்சலாக குரல் கொடுத்து வந்தாலும் மலேசிய – அமெரிக்க நட்புறவு இன்னமும் நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Anthony Blinken னுடன் சந்திப்பு நடத்தியது உட்பட அமெரிக்காவுடனான அனைத்து ஒத்துழைப்பும் பங்காளித்துவமும் தொடர்வதாக அவர் கூறினார். அரசதந்திர ரீதியில் மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான தொடர்பு மட்டுமிற்றி முதலீடு, வர்த்தகம் மற்றும் அரசதந்திர ரீதியிலான தொடர்புகளும் சிறப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சுதந்திரமடைந்த மற்றும் இறையான்மை கொண்ட ஒரு நாடு என்ற முறையில் வன்செயல், கொடூரமான அடக்குமுறை , பாலஸ்தீன் மற்றும் காஷாவில் ஆக்கிரிமிப்பு போன்ற அனைத்துலக விவகாரங்களில் நாம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இந்த அணுகுமுறையினால் பொருளாதாரம போன்ற விவகாரங்களில் நமக்கு பாதிப்பு ஏற்படும் என தாம் நினைக்கவில்லை என்று இன்று நாடாளுமன்றத்தில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் S.N Rayer எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அன்வார் இத்தகவலை வெளியிட்டார். இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம்வரை மலேசியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவழி வர்த்தகம் 29.1 விழுக்காடு அதிகரித்து 264.28 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.