
கோலாலம்பூர், செப் 10 – அரசியலில் நிரந்தர எதிர் என்று யாருமே இல்லை என்பார்கள். அதற்கான ஒரு உதாரணம்தான், DAP மாநாட்டிற்கு வருகை தந்த அம்னோ தலைவர் ஷாஹிட் ஹமிடியின் செயலாகும்.
பல ஆண்டுகளாக அரசியல் வைரிகளாக இருந்து வந்தது DAP மற்றும் BN. ஆனால் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இந்து இரு அணியுமே ஒரு கூடையின் கீழ் வந்துவிட்டன.
இந்நிலையில், இன்று நடைப்பெற்று வரும் DAP கட்சியின் மாநாட்டிற்கு வருகை தந்த முதல் அம்னோ தலைவர் என்ற சரித்திரத்தை படைத்துள்ளார் ஷாஹிட் ஹமிடி.
இன்றைய புத்ராஜெயாவில் நடைப்பெறும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட அவருடன் அம்னோவின் பொதுச் செயலாளர் டத்தோக் அஸிரஃப் வஜ்டி டுசுக்கி மற்றுன் பாரிசான் நேஷனலின் பொது செயலாளர் டத்தோக் செரி சம்பரி காதிர் ஆகியோரும் உடன் சென்றனர்.
அண்மையில், ஷாஹிட், தன் மீதான 47 ஊழல் வழக்கிலிருந்து வெளியேறிய விவகாரம் பக்காதான் ஹராப்பான் அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இன்றைய DAP கட்சியின் மாநாட்டில் ஷாஹிட் கலந்துக் கொண்டுள்ளார்.