பாலிங் புலாவ், ஜுன் 18 – மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத் தொலைத்தொடர்பு பல்லுடக்க துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் ஏற்பாட்டில் பினாங்கு தொழிமுனைவோர்களுக்கு டிஜிட்டல்மயமாக்கல் (D.O.P.E) எனும் பட்டறை சிறப்பாக நடந்தேறியது.
அம்மாணவர்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு பாடத்திட்டதின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 9 ஆம் திகதி டாக்டர் ஜமிலா பிந்தி ஹெச்ஜே அஹ்மத் மற்றும் டாக்டர் சூரியாட்டி பிந்தி சாத் ஆகியோரால் அப்பட்டறை வழிநடத்தப்பட்டது.
D.O.P.E எனும் பினாங்கில் சிறு வணிக உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் அறிவை அதிகரிப்பதே இந்த பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும் என அறிவியல் பல்கலைகழக மாணவர் கரண் ராஜ் தெரிவித்தார்.
இப்பட்டறையில் சிறப்பு விருந்தினராக பினாங்கு பூமிபுத்ரா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ ஸ்ரீ சையத் முகமட் பின் சையத் முர்தாசா கலந்து கொண்டார்.
சஜி வாரிசன் என்ட், பாடி சீக்ரெட் ஹோம் SPA, கிக் காபி, ME.N.U Tomyam, Gerak Dinamik Ent மற்றும் Spin Chicken Rice USM உட்பட பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) அப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டதையும் கரண் ராஜ் கூறினார்.
D.O.P.E பட்டறை, உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் அந்நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.