Latestமலேசியா

மலேசிய இந்திய நட்புறவில் கோபியோ தின விழா புதிய அத்தியாயம் -இந்திய தூதர் பி.என் ரெட்டி பெருமிதம்

கோலாலம்பூர், ஜூன் 5 – கோபியோவின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று ஞாயிற்றுக்கிழமைவரை கோலாலம்பூரிலுள்ள விவேகானந்த பள்ளி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்திய வம்சாளியினர் தின விழா மலேசிய – இந்திய நட்புறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியிருப்பதாக இந்தியத் தூதர் பி.என் ரெட்டி வருணித்தார். முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்வு மலேசிய – இந்திய நட்புறவுக்கு ஒரு பாலமாக மட்டுமின்றி இவ்விரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு இந்த நிகழ்வின்போது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வரங்குகள் கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள் , நடனம் போன்ற படைப்புகள் , மற்றும் மலேசியர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்த வரலாற்றை வெளிப்படுத்தும் கண்காட்சி மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் பெரும் பயனாக இருந்ததாக இந்திய வம்சாவளியினர் தினத்தை நிறைவு செய்து உரையாற்றியபோது ரெட்டி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக கலந்துகொள்வதை வரும் ஆண்டுகளில் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றும் இதன்வழி இந்நாட்டில் இந்திய சமூகங்களின் வரலாற்றையும் நாட்டின் மேம்பாட்டிற்காக இந்திய வம்சாவளியினர் ஆற்றிய பங்கையும் மேலும் துல்லியமாக அனைவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என கோபியோ மலேசிய இயக்கத்தின் தலைவர் குணசேகரன் தெரிவித்தார். ஏற்பாட்டுக் குழு செயலாளர் சசிதரன் மற்றும் இதர சமூக இயக்கங்களின் ஒத்துழைப்போடு சிறந்த முறையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் குணசேகரன் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந்த நிகழ்வை ஆண்டுதோறும் கோபியோ நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோபியோவின் இந்த மூன்று நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மேற்பட்டோர் கலந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் குணசேகரன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!