
கோலாலம்பூர், மே 31 – மலேசிய இந்திய பட்டதாரிகள் சங்கம் அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒத்துழைப்போடு இந்திய அரசியல் முன்நகர்வு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் 10 ஆம் தேதி சனிக்கிழமை மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை இக்கருத்தரங்கு நடைபெறும். அரசியல் கட்சிகளிடையே கொள்கை , சிந்தாந்தம் போன்ற விவகராங்களில் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் இந்திய சமூகத்தை பாதிக்கக்கூடிய விவகாரங்களில் கட்சி சார்பற்ற நிலையில் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசியல் முன் நகர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
இந்த கருத்தரங்கை சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கிவைப்பார். போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இக்கருத்தரங்கை நிறைவு செய்து வைப்பார். பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி முதன்மை உரையாற்றுவார். கருத்தரங்கை ஒட்டி நடைபெறும் விவாத அமர்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா பணிக்குழுவின் தலைவருமான டத்தோ ஆர்.ரமணன், செந்தோசா சட்டமன்ற உறுப்பிர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் முன்னாள் எம்.பியும் SPAN தலைவருமான சார்ல்ஸ் சன்டியாகோ ஆகியோர் பங்குபெறுவர் என இந்த கருத்தரங்கின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் , MAIUG உதவித் தலைவருமான ரவிந்திரன் அர்ஜூன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.