Latestசினிமாமலேசியா

மலேசிய இயக்குனர் தேவ் மரணம் !

கோலாலம்பூர், ஏப் 23 – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனராகவும் கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்த மலேசிய இயக்குனர் தேவ்ராஜா மரணமடைந்தார்.

மலேசிய கலைஞர்களிடையே நன்கு அறிமுகமான இவர் திறமையானவர் என்பதோடு, நிகழ்ச்சி தயாரிப்புத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

இவருடைய திடீர் மரணம் மலேசிய கலை உலகத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, தன்னைப் பற்றி சிறு அறிமுகத்தோடு, இத்துறை மீது தான் கொண்ட காதலையும், அவர் ஈடுபட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,அதில் கிடைத்த அனுபவம் பற்றியும் பகிர்ந்துக் கொண்ட காணொளியை தனது Instagram சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துக் கொண்டிருந்தார். அக்காணொளியில், தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், தற்போது ஒரு “musical video” ஒன்றை தனது திருப்திக்காக தாம் தயாரித்து வருவதாகவும், இதுவே தனது கடைசி பணி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், படப்பிடிப்பிற்காக அவர் தங்கி இருந்த விடுதியின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!