Latestமலேசியா

மலேசிய கடப்பிதழை வெளியிடும் குறிப்பிட்ட அலுவலகங்கள் சனி – ஞாயிறும் திறந்திருக்கும்

கோலாலம்பூர், ஜன 20- கடப்பிதழ்களை வெளியிடும் , குறிப்பிட்ட 20 குடிநுழைவு துறை அலுவலகங்கள் , ஜன 28-ஆம் தேதி முதல், சனி –ஞாயிறுகளிலும் செயல்படும்.

மலேசிய அனைத்துலக கடப்பிதழுக்கான புதிய விண்ணப்பங்களும், புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களும் அதிகரித்திருக்கின்றன. அதையடுத்து, அந்த தேவையைப் பூர்த்தி செய்ய குறிப்பிட்ட அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் காலை மணி 8 முதல் மதியம் மணி 12. 30 வரை செயல்படுமென உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.

இதனிடையே, UTC நகர்புற உருமாற்று மையங்களில் செயல்படும் குடிநுழைவு துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் நேரம், வார நாட்களில் மாலை மணி 7 வரையிலும், ஜோகூர், கெடா, கிளந்தான் , திரெங்கானு ஆகிய மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்களில் சனி –ஞாயிறுகளில் மாலை மணி 5 வரையிலும் நீட்டிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!