
மலேசிய கிண்ண நடப்பு சாம்பியனான ஜொகூரின் JDT எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட எளிதாக Kelantan அணியை 10- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. நேற்றிரவு ஜொகூர் இஸ்கந்தர் புத்ரி சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது கட்ட ஆட்டத்தில் வெற்றி பெற்றைதைத் தொடர்ந்து 15 -1 என்ற கோல் வேறுபாட்டில் JDT காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. இன்று Negeri Sembilan குழுவுக்கும் கிளந்தான் யுனைடெட் கிள்ப்பிற்குமிடையே நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை காலிறுதியாட்டத்தில் JDT அணி சந்திக்கும்.
இதனிடையே நேற்றிரவு MBPJ விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 33 முறை மலேசிய கிண்ணத்தை கைப்பற்றிய சிலாங்கூர் குழு 5 -3 என்ற கோல் வேறுபாட்டில் PDRM அணியை வீழ்த்தி காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. காலிறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணி திரங்கானு காற்பந்து அணியுடன் மோதும் . மற்றொரு காலிறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்ற சபா காற்பந்து அணி பேரா குழுவுடன் மோதவிருக்கிறது.