புத்ராஜெயா, பிப் 16 – மலேசிய சிங்கப்பூர் இடையிலான வான் –தரை மார்க்கமான VTL பயணத்திற்கான டிக்கெட்டுகள் , 100 விழுக்காடு முழுமையாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அந்த முழு விற்பனைக்கான நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக, போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.
இவ்வேளையில் சிங்கப்பூருடனான VTL வான் வழி பயணத்தை , விரைவில் பினாங்கிற்கும், கோத்தா கினாபாலுவிற்கும் விரிவுப்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.