புதுடில்லி, பிப் 11 – பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் 7,925 பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 290 பேர் மலேசிய சிறைச்சாலையில் இருந்து வருவதாக வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய அமைச்சு தெரிவித்தது. வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு சிற்றரசில் 1,663 இந்திய பிரஜைகள் கைதியாக உள்ளனர். மேலும் சவுதி அரேபியாவில் 1,363 பேரும், குவைத்தில் 460 பேரும் சிறையில் இருந்து வருகின்றனர் . சிங்கப்பூர் சிறைச்சாலையில் 76 இந்திய பிரஜைகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே ஜனவரி 31 ஆம் தேதிவரை வெளிநாடுகளில் 4,355 இந்திய பிரஜைகள் கோவிட் -19 தொற்றினால் மரணம் அடைந்தனர். மலேசியாவில் மட்டும் 186 இந்தியப் பிரஜைகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago