
பெய்ஜிங்,மார்ச் 30 – மலேசியாவுக்கும் சீனாவுக்குமிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை பெய்ஜிங் சென்றடைந்தார். Hainan – னிலிருந்து சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங் சென்றடைந்த அன்வாருடன் போக்குவரத்து அமைச்சர் Anthony Loke, ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் Nga Kor Ming ஆகியோரும் உடன் சென்றனர் . அவர்கள் அனைவரையும் சீன வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் Sun Weidong வரவேற்றார். மேலும் மலேசியாவுக்கான சீனத் தூதர் , சீனாவுக்கான மலேசியாவின் துணை தூதர்
Shanmugan Subramaniyam ஆகியோரும் விமான நிலையத்தில் பிரதமர் அன்வாரை வரவேற்றனர்.
அன்வார் நாளை சீன அதிபர் Xi Jinping – கை சந்திப்பார். இருவழி நட்புறவு குறித்து அவர்கள் விவாதிப்பார்கள். சனிக்கிழமையன்று அன்வாருக்கு சீன அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வரவேற்பு சடங்கு நடைபெறும். அதோடு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடும் நிகழ்வையும் அன்வார் பார்வையிடுவார்.