
கோலாலாம்பூர், மார்ச் 23 – மலேசிய பெண்கள் பிரஜைகளாக இருந்தாலும் வெளிநாட்டு கணவர்களை மணந்து தங்களது பிள்ளைகளை வெளிநாட்டில் பிரசவித்திருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கான குடியுரிமைக்காக நடத்திவரும் போராட்டத்திற்கு இப்போதுவரை விடிவு பிறக்கவில்லை. வெளிநாட்டில் பிறந்த தங்களது பிள்ளைளுக்கு குடியுரிமை உட்பட அடையாள ஆவணங்களுக்காக மலேசிய பெண்களில் பலர் பல ஆண்டு காலமாக போராடி வருகிறன்றனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் பிறந்த தங்களது பிள்ளைகளுக்காக குடியுரிமைக்காக 688 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார். நாடாற்ற பிள்ளைகள் உட்பட குடியுரிமைக்காக ஒட்டுமொத்தமாக 150,000 விண்ணப்பங்ளை உள்துறை அமைச்சு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.