
கோலாலம்பூர், நவ 11 – மலேசிய பொது பேட்மிண்டன் போட்டியில் நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான Pearly Tan – M. Thinaah முதல் சுற்றில் தோல்வி கண்டது உள்ளூர் பேட்மிண்டன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. உலகின் ஆறாம் நிலை ஆட்டக்காரர்களாக கணிக்கப்பட்டிருந்த Pearly Tan- Thinaah ஜோடி 19-21. 14-21 என்ற நேர் செட்டுக்களில் Bulgaria சகோதரிகளான Gabriela Stoeva -Stefani Stoeva இணையிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
இதனிடையே இப்போட்டியில் தேசிய பேட்மிண்டன் விளையாட்டாளரான Liew Daren இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். காலின் சதையில் காயம் ஏற்பட்டிருந்த போதிலும் அவர் 21-15.14-21, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் 59 நிமிட போராட்டத்திற்குப் பின் France சின் Toma Junior-ரை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் லகின் முதல் நிலை ஆட்டக்காரரான டென்மார்க்கின் Victor Axelsen-னை இரண்டாவது சுற்றில் மோதுவார்.