கோலாலம்பூர், ஆகஸ்ட்-8 – மலேசிய மாணவர்கள் மேற்கல்வியைத் தொடருவதற்கு இங்கிலாந்து இன்னமும் ஒரு பாதுகாப்பான நாடே என, மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையர் ஐல்சா தேரி (Ailsa Terry) உத்தரவாதமளித்துள்ளார்.
தொழிலாளர் கட்சித் தலைமையிலான பிரிட்டனின் புதிய அராசாங்கம், அனைத்துலக மாணவர்களை தொடர்ந்து வரவேற்கும்.
எனவே, மேற்கல்வி பயில விரும்பும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பிரிட்டனின் நடப்பு நிலவரம் குறித்து கவலைக் கொள்ள வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு வார காலமாகத் மேற்கொண்டு வரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களால், ஒட்டுமொத்த அந்நாடே கதிகலங்கிப் போயிருக்கிறது.
என்றாலும், கலவரங்களை ஒடுக்க பிரிட்டன் அரசாங்கம் சட்டத்திற்குபட்டு செயல்படும்; ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஐல்சா சொன்னார்.
சௌத்போர்ட்டில் (Southport) அண்மையில் 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
கொலையாளி புலம்பெயர்ந்த ஒரு முஸ்லீம் என இணையத்தில் தவறானச் செய்திகள் பரவியதை அடுத்து, சிறுபான்மையினரைக் குறி வைத்து தீவிர வலச்சா