
ஷா அலாம், மே 29 – மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரனோய் 21-19. 21-13. 21 -18 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் Weng Hong கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். எனினும் சுமார் ஒன்றரை மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே 30வயதுடைய Prannoy இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றார். உலகின் 9ஆம் நிலை ஆட்டக்காரராக கணிக்கப்பட்டுள்ள Prannoy அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறுவதே தமது லட்சியம் என்றும் இதற்காக ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த அடைவு நிலையை பெறுவதற்கு தொடர்ந்து கடுமையாக போராடுவேன் என Prannoy தெரிவித்தார்.