
கோலாலம்பூர், மே 27 – மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான Pearly Tan-M Thinaah அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். அவர்கள் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் ஜப்பானின் Yuki -Sayaka ஜோடியை
13-21, 21-19, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினர். இன்று நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் Pearly Tan-M Thinaah தென் கொரியாவின் Jeong Na Eun-Kim Hye Jeong இணையை சந்திக்கவிருக்கின்றனர். அவர்கள் 21-15,18-21, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் Apriyani Rahayu-Siti Fadia Silva ஜோடியை வென்றனர். இதனிடையே ஆண்கள் இரட்யைர் பரிவில் மலேசியாவின் Aaron chia – Soo wook Yik ஜோடி 18-21. 19-21 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் Lee Roky – Dennias Martha இணையிடம் தோல்வி கண்டனர்.