
கோலாலம்பூர், நவ 7 – பிரபல பாலிவுட் நடிகரான ஹ்ரிதிக் ரோஷன் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். டிசம்பர் 1ஆம் தேதி கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் நடைபெறவிக்கும் ‘Stars On Fire Kuala Lumpur Live Concert’ கலை நிகழ்ச்சியில் ஹ்ரிதிக் ரோஷனுடன் பிரபல நடனக் கலைஞரும் நடிகருமான பிரபுதேவாவும் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்சியில் சிறந்த படைப்பை வெளிப்படுத்துவதற்கு டூம் (Dhoom) திரைப்பட நடிகர் ஹ்ரிதிக் ரோஷனும் இதர கலைஞர்களும் தயாராகி வருவதாக அந்த கலைநிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான சோனாலி ராணா தெரிவித்தார். ஹ்ரிதிக் ரோஷனுடன் போலிவுட் நடிகைகளான வாணி கபூர், மலைகா அரோரா மற்றும் சன்யா மல்ஹோத்ரா ஆகியோரும் கோலாலம்பூரில் நடைபெறும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கின்றனர்.