
திருவனந்தபுரம், நவம்பர்-7 – பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகார் பொய்யானது என கேரளா போலிசாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் நிவின் பாலிக்கு எந்த தொடர்புமில்லை;
முதலில், பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலேயே அவர் இல்லையென, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் போலீசார் கூறினர்.
சில மாதங்களுக்கு முன்னர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் பாலியல் புகார்களில் சிக்கிய போது, ‘பிரேமம்’ படப்புகழ் நிவின் பாலி மீதும் நடிகை ஒருவர் புகார் அளித்தார்.
படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி நிவின் தம்மிடம் அத்துமீறியதாக. அப்பெண் புகாரளித்தார்.
இந்நிலையில் அப்புகாரில் உண்மையில்லை என உறுதிபடுத்தப்பட்டு, குற்றவாளி பட்டியலிலிருந்து நிவின் பாலி நீக்கப்படுகிறார்.