Latestமலேசியா

மலையேற வயது ஒரு தடையல்ல – 65 வயதிலும் தொடர்ந்து மலையேறி சாதனை படைக்கும் இளங்கோவன்

ரெம்பாவ் , ஜூன் 14 – 50 – 60 வயதுக்கு பிறகும் மலையேறும் முயற்சியில் வெற்றி பெறலாம் என்பதை நிருபித்து வருகிறார் நாட்டின் முன்னணி மலையேறிகளில் ஒருவரான N. இளங்கோவன் (N. Elanghovan). உடலை எப்போதும் திடகாத்திரமாக வைத்திருப்பதற்கான பயிற்சி தேவை. முக்கியமாக உள்நாட்டிலேயே சிறு சிறு மலைகளை ஏறி பயிற்சி பெற்ற பிறகு அதிக உயரமான மலைகளை ஏற முயற்சிக்கலாம் என புதிதாக மலையேறும் ஆர்வத்தை கொண்டவர்களுக்கு இளங்கோவன் தமது ஆலோசனையாக தெரிவித்திருக்கிறார்.

தாம் முன்பு கேமரன் மலையில் இருந்ததால் அங்குள்ள அனைத்து மலைகளையும் ஏறியது நல்லதொரு பயிற்சி தளமாக இருந்ததாகவும் 50 வயதிற்குப் பின்னர் தான் மலையேறும் நடவடிக்கையில் தீவிர முனைப்பு காட்டியதாக உலகின் உயரமான மலைகளான நேப்பாளத்தின் எவரெஸ்ட், டான்சானியாவின் கிளிமஞ்சாரோ (kilimanjaro ) மற்றும் அமெரிக்கா அலாஸ்காவிலுள்ள டினாலி (Denali) ஆகிய மலைகளை ஏறி சாதனை புரிந்திருக்கும் இளங்கோவன் தெரிவித்தார்.

மலேசியாவில் மட்டும் 20 மலைகளை ஏறியிருக்கிறேன். அவையனைத்தும் அடிப்படையில் நல்லதொரு பயிற்சியாக இருந்ததையும் 65 வயதுடைய இளங்கோவன் கூறினார். பொதுவாக வெளிநாட்டில் மலையேறுவது கூடுதலாக செலவு ஏற்படும், இதற்கு நம்மை தாயர்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் Denali மலையேறும் செலவுக்காக வேறு வழியின்றி சிலாங்கூர் ஷா அலாமிலுள்ள தனது வீட்டை 300,000 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த மலையை ஏறுவதற்கு மட்டும் விமான கட்டணம் எல்லாம் சேர்ந்து தனக்கு 40,000 ரிங்கிட் செலவானது. மலையேறி இல்லாமல் அந்த மலையே ஏறியதால் சுமார் 12,000 அமெரிக்க டாலர் அல்லது 56,598 ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடிந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!