Latestமலேசியா

மளிகைப் பொருட்களின் விலையை ஒப்பீடு செய்யும் ‘KitaJaga’ செயலி அறிமுகம்

புத்ராஜெயா, மார்ச் 27 – மளிகை பொருட்களின் விலையை ஒப்பீடு செய்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கட்டுப்படியான விலையில் பொருட்களை வாங்குவதற்கு உதவிடும் “KitaJaga” எனும் செயலியை பொருளாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

மக்கள் எங்கு இருந்தாலும், அந்த இடத்தில் விற்கப்படும் பொருட்களின் விலையை ஒப்பீடு செய்ய முடியுமென அமைச்சர் ரஃபிசி ரம்லி ( Rafizi Ramli ) தெரிவித்தார்.

அமைச்சு மற்றும் Kita Jaga அமைப்பின் ஒத்துழைப்பின் மூலமாக அந்த செயலி மேம்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், Kita Jaga அமைப்பு தன்னார்வ ரீதியாக அந்த செயலியை உருவாக்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தற்போது விலைவாசி , மளிகைப் பொருட்களையே அதிகம் உட்படுத்திருப்பதால், அமைச்சு முதலில் அந்த பொருட்களின் விலையை ஒப்பீடு செய்யும் முறையையே அறிமுகம் செய்துள்ளது. பின்னர் இதர பொருட்களின் பிரிவுகளுக்கும் அந்த விலை ஒப்பீட்டு முறை விரிவுப்படுத்தப்படுமென ரபிசி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!