Latestமலேசியா

மழைக்காக ஒதுங்கியவர்கள் மீது லோரி மோதியது; இருவர் மரணம்

குருன், மார்ச் 8 – கெடா Gurunனில் மழைக்காக பாலத்திற்கு கீழே ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது லோரி ஒன்று மோதியது.

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 92.8வது கிலோமீட்டரில் ஏற்பட்ட அந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணமடைந்தனர். பலர் அருகேயுள்ள கால்வாயில் விழுந்து காயமடைந்தனர்.

மதியம் 3.30 மணியளவில் ஏற்பட்ட அந்த விபத்தில், குறைந்தது 9 மோட்டார் சைக்கிளோட்டிகள் மழைக்காக ஒதுங்கியிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து லோரி அவர்களை மோதிய பின்னர் சாலை ஓரம் கவிழ்ந்ததாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!