
சான் பிரான்சிஸ்கோ, மே 16 – கலிபோர்னியாவில் மழைநீர்க் குழாயின் உள்ளே 5 மீட்டர் நீளம் கொண்ட முதலை இருப்பது ரோபோட்டிக் கேமராவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ரோபோட்டிக் கேமராவை பயன்படுத்தி அந்த குழாயில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிய முயன்றபோது அந்த குழாய்க்குள் இரண்டு ஒளிரும் கண்கள் தடுமாறிக் கொண்டிருந்ததாகவும் ரோபர்ட் நெருங்கி சென்றபோது அந்த முதலை பின்னோக்கி நகர்வதையும் அந்த காமிரா பதிவு செய்துள்ளது.
காமிரா அந்த முதலையை நெருங்க நெருங்க, அது பயந்து பின்னோக்கி ஓடுவதையும் அதில் பார்க்க முடிகிறது.
இந்தக் காட்சியைக் கண்ட ஊழியர்கள் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைதுள்ளனர்.