
கோலாலம்பூர், பிப் 3- மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், காய்கறிகளின் விலை அதிகமாக இருக்குமென, விவசாயிகளும், மொத்த வியாபாரிகளும் பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, காய்கறிகளின் விலையைக் காட்டிலும், இறைச்சி, மீன்களின் விலை இன்னும் மலிவாக இருப்பதாக கோலாலம்பூர் காய்கறி மொத்த வியாபாரச் சந்தையின் தலைவர் Wong Keng Fatt கூறியுள்ளார்.
மொத்த வியாபார நிலையில், ஒரு கிலோ தக்காளி 10 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. கடையை வந்தடையும்போது அந்த விலை 13 ரிங்கிட்டாக உயர்வதாக அவர் கூறினார்.
இவ்வேளையில் காய்கறிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். ஆனால் அந்த காய்கறிகள் மலேசியா வந்தடைய 10 நாட்களாகும். இதுவே தாய்லாந்து என்றால் 3 தினங்கள் ஆகுமென அவர் குறிப்பிட்டார்.