
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டுமென, பிரதமர் விரும்புகிறார்.
அவ்விவகாரம் தொடர்பில் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ள டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இரு தரப்பும் இணக்கமானச் சூழலில் பேசித் தீர்க்க வேண்டுமென்றார்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதனைத் தெரிவித்தார்.
அக்கோயில் விவகாரம் தொடர்பில் பிரதமருடன் பல முறை தாம் பேசியிருப்பதாக, இன்று அக்கோயிலுக்கு வருகைத் தந்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
எது எப்படி இருப்பினும், அரசாங்கம் நிச்சயமாக ஆலயத்தை உடைக்காது; மாறாக DBKL சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் தோதுவான ஒரு சுமூகமான முடிவை எட்டுமென ரமணன் உறுதியளித்தார்.
அதே சமயம், இது தனியாருக்குச் சொந்தமான நிலம்; எனவே இதில் அரசாங்கம் சம்பந்தப்படவில்லை; இருந்தாலும் மக்களின் நல்லிணக்கம் கருதி DBKL சுமூகத் தீர்வை எட்டும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இந்த்க விவகாரத்தில் யாருக் அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
2014-ஆம் ஆண்டு, கோயில் நிர்வாகத்துக்கே தெரியாமல் DBKL-லிடமிருந்து Jakel குழுமத்துக்கு அந்நிலம் விற்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு புதிதாக மசூதி ஒன்றை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், கோயிலை ஒரு பொருத்தமான இடத்திற்கு மாற்றவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
என்ன நடந்தாலும் ஆலய இடமாற்றம் சுமூகமான முறையில் மேற்கொள்ளப்படுமென்பதை Jakel நிறுவனமும் DBKL-லும் உறுதியளித்துள்ளன.