கோலாலம்பூர், செப்டம்பர் 8 – தலைநகர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சம்பவத்திற்கு மனித நடவடிக்கைகள், வானிலை, நிலத்தடி மண்ணரிப்பு உள்ளிட்டவை காரணங்களாக அமைந்திருக்கின்றன.
அச்சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்புகள் மேற்கொண்ட விசாரணையில் அது கண்டறியப்பட்டுள்ளது.
இயற்கை வளம், சுற்றுச் சூழல் மற்றும் நிலைத்தன்மை அமைச்சு அதனைத் தெரிவித்தது.
இந்நிலையில் கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL தலைமையிலான பணிக் குழு, மஸ்ஜித் இந்தியா புவியியல் மற்றும் நிலத்தடி கட்டமைப்பு மீதான முழு அறிக்கையை 3 மாதங்களில் தயார் செய்யும்.
அறிக்கைத் தயாரானதும் மேலும் விவரங்கள் விரிவாகத் தெரிய வருமென அமைச்சு கூறியது.
இந்தியா, ஆந்திராவைச் சேர்ந்த ஜி.விஜயலட்சுமி என்பவரை கடந்த மாதம் 8 மீட்டர் ஆழத்திற்கு நிலம் உள்வாங்கியச் சம்பவத்தை அடுத்து, அப்பணிக் குழு அமைக்கப்பட்டது.
நில அமிழ்வில் சிக்கிக் காணாமல் போனவரைத் தேடி மீட்கும் பணிகள் ஒன்பதாவது நாளோடு நிறுத்தப்பட்டு, அவரின் குடும்பமும் தாயகம் திரும்பியுள்ளது.