
புது டெல்லி அக் 3 – மஹராஷ்டிரா அரசு மருத்துவமனையில் புதிதாய் பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
இன்னும் 70 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மருந்து மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையினால்தான் அந்த அரசு மருத்துவமனைகளில் இவ்வாறு மரண சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் முதலமைச்சர் குற்றம் சாடியுள்ளார்.
500 பேருக்கான உபகரணங்கள் இருக்கும் மருத்துவமனைகளில் 1,200 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
நிதி மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையினால் மருத்துவமனைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.