
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவரும் ம.இகாவின் தேசிய பொருளாளருமான டத்தோ என்.சிவகுமார் டி.எஸ்.கே குழுவுடன் இணைந்து நோன்பு துறக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
கோலாலம்பூர் ஜாலான் புத்ராவில் உள்ள ஹைதரபாத் (Hyderabad) உணவகத்தில் கொபெராசி பெர்கிம் சபா பெர்ஹாட் (Koperasi PERKIM Sabah Berhad) மற்றும் PKRIM எனப்படும் மலேசிய இஸ்லாமிய சமூகநல Raudah சங்கத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தனித்து வாழும் தாய்மார்கள் , அஸ்னாப் (asnaf) எனப்படும் வறிய நிலையில் உள்ள முஸ்லீம்கள் , ஆதரவற்றவர்கள் மற்றும் வசதி குறைந்த தரப்பினருக்கும் நன்கொடைகள் மற்றும் வீட்டு உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த உதவி சிறிய அளவாக இருந்தாலும் தேவைப்படுபவர்கள் இதனை பெற்றதோடு இதன்வழி சமூகத்தில் ஒன்றுமை மற்றும் பரிவு உணர்வு மேலும் வலுவடையும் என சிவகுமார் தெரிவித்தார்.
சமூகத்தில் ஒற்றுமை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டது குறித்து சிவகுமார் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.