உலகம்மலேசியா

மாசு தூய்மைக்கேட்டினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குள் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும்

கோலாலம்பூர், டிச 26 – மாசு  தூய்மைக் கேட்டினால்  மூடப்பட்டிருந்த  Sungai  Semenyih  மற்றும்  நெகிரி செம்பிலானில்  Bukit Tampoi LRA நீர்  சுத்திகரிப்பு நிலையங்கள்  நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கின. அந்த இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும்  நீர் தூய்மைக்கேட்டிலிருந்து முழுமையாக  மீண்டுள்ளது.  நேற்று  மாலை  6 மணி முதல் கட்டம் கட்டமாக நீர் வினியோகம் திரும்பத் தொடங்கியதாக   Air  Selangor   தனது முகநூலில் வெளியிட்ட  அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.  இன்று  பிற்பகல் 2 மணிக்குள்  பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் நீர் விநியோகம்  முழுமையாக  வழக்க நிலைக்கும் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!