ஜோகூர் பாரு, பிப் 24 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மேலும் மூன்று வேட்பாளர்களின் பட்டியலை Muda கட்சி இன்று அறிவித்தது. Parit Raja சட்டமன்ற தொகுதியில் 28 வயதுடைய Fikri Musa போட்டியிடுகிறார்.
ஆர். சங்கரன் Machap சட்டமன்ற தொகுதியிலும் , 28 வயதுடைய
Rashid Abu Bakar லார்க்கின் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று வேட்பாளர்களின் பெயர் பட்டியலை Muda கட்சியின் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman இன்று அறிவித்தார்.
இதற்கு முன் புத்ரி வங்சா, புக்கிட் பெர்மாய், புக்கிட் கெப்போங் மற்றும் தெனாங் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும் மூடா கட்சி அறிவித்திருந்தது.
இதனிடையே பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சியின் நட்புறவாக Muda இருந்தாலும் Larkin சட்டமன்ற தொகுதியில் Muda வும் PKR ரும் மோதவிருக்கின்றன. லார்க்கின் தொகுதியில் அந்த மோதலை தவிர்ப்பதற்கு தாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாக Syed Saddiq தெரிவித்தார்.