சிரம்பான், பிப் 3 – நெகிரி செம்பிலான் , ரந்தாவ் ( Rantau) Kampung Sega Tengah செம்பனைத் தோட்டத்திற்குள் , மாட்டைத் தேடிச் சென்று காணாமல் போன, பாட்டி ஒருவர் நான்கு தினங்களுக்குப் பின்னர் மிகச் சோர்வான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
74 வயதான சிவபாக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாகவும், இன்று வியாழக்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Nanda Maarof தெரிவித்தார். பாட்டி சிவபாக்கி காணாமல் போன மறுநாள் அவர் தேடிச் சென்ற மாடு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.