
செப்பாங், ஜன 6 – பள்ளிக்கூட கட்டடத்தின் 3-வது மாடியிலிருந்து விழுந்து, 3-ஆம் படிவ மாணவர் படுகாயமடைந்தார்.
புத்ராஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர், இன்னும் சுயநினைவு திரும்பாத நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் Wan Kamarul Azran Wan Yusof தெரிவித்தார்.
இவ்வேளையில், சம்பந்தப்பட்ட மாணவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சில முறை பள்ளியின் தரப்பில் அவருக்கு மனோவியல் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார்.
அத்துடன் இதற்கு முன்பு 38 Paracetomal மாத்திரைகளை விழுங்கியதற்காக செர்டாங் மருத்துவமனையில் மனநல சிகிச்சையைப் பெற்றதாகவும் Wan Kamarul தெரிவித்தார்.