
கோலாலம்பூர், மார்ச் 17 – தேசிய காற்பந்து அணியில் சேர வேண்டுமென்றால் , இஸ்லாமிய மதத்தை தழுவுமாறு மாணவர் ஒருவரை வலியுறுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் மீதான விசாரணை, ஒரு மாதம் ஆகியும் இன்னும் முழுமைப் பெறவில்லை.
அந்த சம்பவம் தொடர்பில், மேற் விசாரணையை நடத்தும்படி நேற்று புக்கிட் அமான் கேட்டுக் கொண்டதாக, செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார்.
அதையடுத்து முழுமையான விசாரணை அறிக்கை, இம்மாதம் 20 -ஆம் தேதி மீண்டும் புக்கிட் அமானுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் மேற்நடவடிக்கைக்காக அந்த அறிக்கை அரசாங்க துணை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுமென அவர் கூறினார்.