
கோலாலம்பூர், மார்ச் 31 – உலகளாவிய மொழியான ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பதின் வாயிலாக, வேலை சந்தையில் ஒருவர் அதிக போட்டியாற்றலுடன் திகழ முடியுமென்பதை மறுக்க இயலாது.
கல்வியிலும், வேலையிடத்திலும், வர்த்தகத்திலும் தன்னம்பிக்கையை ஊட்டக் கூடிய அத்தகைய ஒரு மொழியை தமிழ் மாணவர்கள் கற்றுத் தேர வேண்டும் எனும் நோக்கத்தில், ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது Saraswathy English challenge எனப்படும் சரஸ்வதி ஆங்கில சவால் போட்டி.
சிறு வயது முதலே ஆங்கிலப் புலமையின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் அதே வேளை, மாணவர்களின் பொதுப் பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ள, சமூக கடப்பாட்டின் ஒரு முயற்சியாக Basis Bay நிறுவனம் இந்த போட்டியை நடத்துகின்றது.