Latestமலேசியா

மாணவர்களை உட்படுத்திய சமூக ஊடகப் பதிவுகளுக்கு, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாகும்

தஞ்சோங் காராங், செப்டம்பர்-24, கல்வி அமைச்சின் கீழுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், மாணவர்களைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கும், அவர்களின் குரலைப் பதிவுச் செய்வதற்கும் முன், பெற்றோர்களின் அனுமதியைக் கட்டாயம் பெற்றாக வேண்டும்.

பதிவுச் செய்தவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பெற்றோர்களின் அனுமதி அவசியமென, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) தெரிவித்தார்.

அவ்விஷயத்தில் அமைச்சு கண்டிப்புடன் செயல்படும்; மாணவர்களின் பாதுகாப்பை உட்படுத்தியிருப்பதால் அதில் அனுசரனைப் போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

பள்ளிகளில் பாலியல் தொந்தரவு விஷயங்களைக் கையாளவும், மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமைக் கொடுக்கவும், கல்வி அமைச்சு ஏற்கனவே உரிய வழிகாட்டி கோட்பாடுகளை வரைந்து செயல்படுத்தி வருவதாக ஃபாட்லீனா சொன்னார்.

மாணவர்களை உட்படுத்தி சமூக ஊடக உள்ளடக்கங்களைத் தயாரிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள், ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) முன்னதாகக் கூறியிருந்தார்.

சமூக ஊடக உள்ளடக்கத் தயாரிப்பில், 2001 சிறார் சட்டத்தை ஆசிரியர்களும் பின்பற்றுவதை கல்வி அமைச்சு உறுதிச் செய்ய வேண்டுமென ஃபாஹ்மி வலியுறுத்தியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!