
கோலாலம்பூர், மே 12 – சக மாணவர்களால் மாணவர் ஒருவர் பகடிவதை செய்யப்பட்டு அடிக்கப்படும் காணொலி வைரலாகி வலைத்தளவாசிகளின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இச்சம்பவத்தில் “நீ என்னை மதிக்கவில்லை” என கூறிக்கொண்டே மாணவர் ஒருவர் அந்த மாணவனை தலையில் மற்றும் உடம்பில் தாக்குவதும், சக மாணவர்களும் தடுக்காமல் சேர்ந்து தாக்குவதும் அதில் காணப்படுகிறது.
இக்காணொலி வைரலாகியிருக்கும் நிலையில், வலைதலைவாசிகளிடமிருந்து பல்வேறான கண்டன கருத்துகளை பெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.