
கோலாலம்பூர், ஜன 25 – Cyberjaya , Mutiara Ville வில் உள்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவரின் வீட்டில் வேவு பார்த்ததோடு அவரது உள்ளாடையை திருடியதாக நம்பப்படும் பாலஸ்தீன மாணவரை போலீசார் கைது செய்தனர். தமது வீட்டை அரபு இன ஆடவர் ஒருவர் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக அண்டை வீட்டுக்காரர் ஒருவரிடமிருந்து தகவல் பெற்றதைத் தொடர்ந்து அந்த மாணவி புகார் செய்ததாக செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் Wan Kamarul Wan Yusof தெரிவித்தார். அந்த வீட்டின் கழிவறைக்கு அருகேயுள்ள ஜன்னல் கண்ணாடிக்கு அருகே அந்த ஆடவர் நின்றுகொண்டிருந்தோடு மாணவியின் காற்சட்டையை எடுத்துச் சென்றதை அண்டை வீட்டுக்காரர் காணொளியில் பதிவு செய்ததை கண்டவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அந்த சந்தேகப் பேர்வழி நேற்று மாலை மணி 4 அளவில் Mutiara Ville யில் கைது செய்யப்பட்டதாக Wan Kamarul கூறினார்.