Latestமலேசியா

மாதத் தவணைப் பணம் செலுத்துவதை தவிர்க்க, போலி வாகன பதிவு எண் ; சுபாங்கில், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

சுபாங் ஜெயா, ஜூன் 21 – மோட்டார் சைக்கிளுக்கு மாத தவணைப் பணம் செலுத்துவதை தவிர்க்க, போலி வாகன பதிவு எண்ணை பொருத்தி இருந்த ஆடவன் ஒருவன் வசமாக பிடிபட்டான்.

நேற்றிரவு மணி ஒன்பது வாக்கில், சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா செலாத்தான் டோல் சாவடியில், JPJ – சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், அவ்வாடவனின் செயல் அம்பலமானது.

வங்கிக்கு மாத தவணைப் பணம் செலுத்துவதை தவிர்க்கவும், அதனால் மோட்டார் சைக்கிளை யாரும் எடுத்துச் செல்லாமல் இருப்பதை உறுதிச் செய்யவும், அந்த 21 வயது ஆடவன், தனது மோட்டார் சைக்கிளின் உண்மையான பதிவு எண்ணை அகற்றி விட்டு, போலி பதிவு எண்ணை பொருத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

சாலை போக்குவரத்து துறை சோதனையின் போது, அவ்வாடவனின் மோட்டார் சைக்கிள் பதிவு எண் முறையாக இல்லாததை அடுத்து, சந்தேகம் எழுந்ததால் விசாரணையில் அவன் போலி எண்ணை பயன்படுத்தியது தெரிய வந்தததாக, சிலாங்கூர் சாலை போக்குவரத்து துறையின் துணை இயக்குனர் டத்தோ அஹ்மாட் கமருன்சாமான் மெஹாட் (Ahmad Kamarunzaman Mehat) தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, வாகனம் ஓட்டும் உரிமமும் இல்லாத அவ்வாடவனின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதையும் கமருன்சாமான் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, அந்த சாலை சோதனை நடவடிக்கையின் வாயிலாக, மொத்தம் ஆயிரத்து 220 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை ; பல்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில், 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!