Latestமலேசியா

மாதந்தோறும் கை நிறைய சம்பளம்; இருந்தாலும் காட்டுப் பறவைகளை சட்டவிரோதமாக விற்று காசு பார்த்த ஆடவர் கைது

கோலாலம்பூர், மே-3,

தனியார் துறையில் உயர் பதவியில் அமர்ந்துக் கொண்டு மாதந்தோறும் கை நிறையச் சம்பளத்தைப் பெற்று வருகின்ற போதிலும், சிலருக்கு அது போதவில்லை போலும்.

அதனால் தான் அதிகப்படியான ஆசையில், பாதுகாக்கப்பட்ட காட்டு பறவைகளை சட்டவிரோதமாக விற்கும் அளவுக்கு அவர்கள் சென்று விடுவது அம்பலமாகியுள்ளது.

அதுவும் சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் அச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை தீபகற்ப வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறை PERHILITAN கண்டறிந்துள்ளது.

கோலாலம்பூரில் அப்படியொருவரின் சொகுசை வீட்டில் அண்மையில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது PERHILITAN அதிகாரிகளுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

Alexandre வகை பறவைகள், Sun conure பறவைகள், Bayan பறவைகள், Love birds பறவைகள் மற்றும் Indian Ringneck பறவைகள் அங்கு கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் மொத்த மதிப்பு 40,000 ரிங்கிட்டை எட்டலாம் எனக் கணக்கிடப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட அந்த காட்டு பறவையினங்களை வீட்டில் வளர்ப்பதற்கான முறையான உரிமம் எதுவும் இல்லாததால், 2010 வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 40 வயது ஆடவர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டு, போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இணையம் வாயிலாக அப்பறவைகளைச் சட்டவிரோதமாக விற்று, ஆயிரக்கணக்கில் அந்நபர் வருமானம் ஈட்டி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!