செபராங் பெராய், மே-20 – பினாங்கு செபராங் பெராயில் பெரியப் பானையில் சுட சுட வெந்துக் கொண்டிருந்த சூப்பில் திடீரென காகம் வந்து விழுந்தது கண்டு உணவக உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
செபராங் பெராய் சுற்று வட்டாரங்களில் காகங்களைச் சுட்டு வீழ்த்த செபராங் பெராய் மாநகர மன்றம் MBSP சனிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
சூப்பில் காகம் விழுந்ததால் தனக்கு 2,000 ரிங்கிட் வரையில் நட்டம் என உணவக உரிமையாளர் சோகத்துடன் கூறியது வைரலாகியுள்ளது.
Instagram-மில் வைரலான காணொலியில், சூப் பானையில் இருந்து செத்துப் போன காகத்தை இரு ஆடவர்கள் வெளியே எடுப்பது தெரிகிறது.
சூப் சூடாக இருந்ததால் காகத்தின் இறகுகளும் கழன்றி வந்து, ரத்தமும் பட்டு விட்டதால் ஒரு பானை சூப்பும் குப்பைக்கே போயிருக்கிறது.
இவ்வேளையில் காகங்களைச் சுடும் பணியை மேற்கொண்டவர்கள் என்ற வகையில் MBSP தரப்பு அந்த உணவக உரிமையாளரைத் தொடர்புப் கொண்டுள்ளது.
இழப்பீடு தொடர்பில் சுமூகத் தீர்வை எட்ட அவருடன் பேசப்படும் என்றும் அது தெரிவித்தது.