
ஜோர்ஜ்டவுன், ஜன 24 – ஜூன் மாதம் மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான சிறந்த நேரம் எனும் நிலைப்பாட்டில் பினாங்கு மாநில அரசாங்கம் உறுதியாக உள்ளது.கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவில், தாங்கள் பக்காத்தான் ஹராப்பானைப் பின்பற்றப் போவதில்லை என பாஸ் கட்சி இதற்கு முன்பு கூறியிருந்தது.
இந்நிலையில் பாஸ் – சின் நிலைப்பாடு அவ்வாறிருக்க, ஜூனில் மாநிலத் தேர்தலை நடத்தும் தங்களின் முடிவிலும் மாற்றமிருக்காது என பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow கூறியிருக்கிறார்.மேலும் பாஸ் கட்சி , தனியே வெறொரு தேதியில் மாநிலத் தேர்தலை நடத்த விரும்பினால் , அவ்விவகாரத்தில் தங்களுக்கு வேறேந்த தேர்வும் இல்லை . தங்களின் முடிவே உறுதியானது என அவர் கூறினார்.
இதனிடையே, மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நெகிரி செம்பிலான் சட்டமன்றம் மே மாதம் கலைக்கப்படலாமென அம்மாநில மெந்திரி பெசார் Datuk Seri Aminuddin Harun கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.