Latestமலேசியா

மாநிலம் கடந்து சுற்றுப் பயணம் ; அனுமதி உடனடியாக மீட்டுக் கொள்ளப்படுகிறது

கோலாலம்பூர், மே 4 – சுற்றுலா நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தி,  RMCO எனப்படும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ள, மாநிலம் கடப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை, அரசாங்கம்  உடனடியாக மீட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்றுகள் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த அனுமதி மீட்டுக் கொள்ளப்படுவதாக, அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நிலைமை சீரடைந்தவுடன், மாநிலம் கடந்து  பாதுகாப்பான சுற்றுப் பயணம் மேற்கொள்வது தொடர்பான அனுமதி,  தகுந்த நேரம் வரும்போது மீண்டும் அறிவிக்கப்படுமென அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!