Latestமலேசியா

மாநிலம்-மாவட்டம் கடப்பதற்கு அரசாங்கம் அனுமதி தந்து விட்டதா?

கோலாலம்பூர், ஜூலை 22 – மாநிலம் மாவட்டம் கடப்பதற்கான  அரசாங்கத்தின் அனுமதி தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் காணொளி பொய்யானது என , சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அந்த காணொளியில் இடம்பெற்றுள்ள செய்தி,  மாநிலம் மாவட்டம் கடப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், சம்பந்தப்பட்ட காணொளியில் உள்ள  செய்தி இவ்வாண்டு ஏப்ரல் முதலாம் தேதி வெளியானது எனவும், அந்த உண்மையான காணொளியின் நீளம் ஒரு நிமிடம் எனவும்  சுகாதார அமைச்சு தெரிவித்தது.

உண்மையான காணொளியின் பெரும்பகுதி நீக்கப்பட்டு,  வெறும்   20 வினாடிகள் கொண்ட காணொளி   மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

எனவே முழு தகவல் அந்த காணொளியில்  இடம்பெறவில்லை என குறிப்பிட்டு,  சம்பந்தப்பட்ட தகவலையும் மறுத்து, சுகாதார அமைச்சு செய்தியினை வெளியிட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு சில தளர்வுகள் வழங்குவது குறித்து தேசிய மீட்சித் திட்டக் குழு கலந்தாலோசிப்பதாக,  அண்மையில் பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியிருந்தார்.
ஆனால் அதன் தொடர்பான  இறுதி முடிவு எதனையும் அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!