Latestமலேசியா

மாநில தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு ; PH, BN ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடத்துகிறது

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 16 – எதிர்வரும் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, தொகுதி பங்கீடு தொடர்பில், பக்காத்தான் ஹரப்பானும் தேசிய முன்னணியும் வரும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசவுள்ளன.

Menara Dato Onn- னில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்கும் ஒற்றுமை அரசாங்க செயலவை கூட்டத்தில் அது குறித்து பேசப்படவிருப்பதாக, PKR கட்சியின் தலைமைச் செயலாளர் சைபூடின் நசுதியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail ) தெரிவித்தார்.

தற்போது தொகுதி யாரின் வசமுள்ளது, 15–வது பொதுத் தேர்தலில் கட்சியின் அடைவுநிலை , வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு , அந்த தொகுதி பங்கீடு தொடர்பில் கலந்து பேசப்படுமென அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!